குட் நியூஸ் சொன்ன அமைச்சர்..! 9 இடங்களில் நியோ டைடல் பூங்கா... 25,000க்கும் அதிகமான பேருக்கு வேலைவாய்ப்பு..!
2026-2027ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார் தமிழக நிதி துறை அமைச்சர் தங்கம் தென்னரசு.
டைடல் பூங்காக்கள் மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் கட்டப்பட்டு வருவதை குறிப்பிட்ட நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு. திருச்சி, மதுரை, ஓசூர் ஆகிய நகரங்களில் 1070 கோடி ரூபாய் முதலீட்டில் புதிதாக டைடல் பூங்காக்களை கட்டி வருவதை சுட்டிக்காட்டினார்.
விழுப்புரம், தஞ்சாவூர், சேலம், தூத்துக்குடி, வேலூர், காரைக்குடி, திருப்பூர் ஆகிய இடங்களில் 7 நியோ டைடல் பூங்காக்கள் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளன என தெரிவித்தார்.
நாமக்கல், திருவண்ணாமலை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, நாகப்பட்டினம், கரூர், புதுக்கோட்டை ஆகிய 9 நகரங்களில் நியோ டைடல் பூங்காக்கள் 388 கோடி ரூபாயில் பணிகள் நடைபெற்று வருகின்றன என கூறினார். இதனால் 25,000க்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாகும் என தெரிவித்தார்.