×

பக்தர்களுக்கு குட் நியூஸ் ..! இன்று முதல் 4 நாட்களுக்கு திருச்செந்தூர் முருகன் கோவிலில் கட்டண தரிசனம் ரத்து..!

 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்-க்கு தினம்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். திருவிழா நாட்கள் மற்றும் விடுமுறை தினங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் மேற்கொள்வார்கள்.

இந்த நிலையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாகம் இந்த ஆண்டு வரும் 30ஆம் தேதி நடைபெற உள்ளது. முருகப்பெருமான் அவதரித்த நாளே வைகாசி விசாகம் என்று கருதப்படுகிறது. அன்றைய தினம், விரதம் இருந்து மனதார முருகப் பெருமானை வழிபட்டால் வேண்டிய வரங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.

இந்நிலையில், வைகாசி விசாக தினமான மே 30-ஆம் தேதி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அதிகாலை ஒரு மணிக்கு நடை திறக்கப்படுகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்த நிலையில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு மே 28ஆம் தேதி முதல் மே 31ஆம் தேதி வரை நான்கு நாட்கள் ரூபாய் 100 கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த 4 நாட்களில் இலவச தரிசனம் மட்டுமே நடைமுறையில் இருக்கும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.