×

பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்..!  45 நாள்கள் சம்மர் லீவ் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!

 

தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் என ஆயிரக்கணக்கான கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வரும் நிலையில், இந்த கல்வி நிறுவனங்களில்  லட்சக்கணக்கான மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். இதில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை பொதுத்தேர்வு நடத்தப்பட்டு மாணவர்களுக்கு மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். 

அந்த வகையில் இந்த ஆண்டு மார்ச் 2-ந் தேதி 12-ம் வகுப்பு மாணவர்களுக்காக பொதுத்தேர்வு தொடங்கிய நிலையில், மார்ச் 26-ந் தேதி இந்த தேர்வு நிறைவடைந்தது. அதேபோல் மார்ச் 11-ந் தேதி தொடங்கிய 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6-ந் தேதி நிறைவடைந்த நிலையில், தற்போது 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இதில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஏப்ரல் 6-ந் தேதி தொடங்கி 16-ந் தேதி வரை தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. 

அதேபோல், 6 முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஏப்ரல் 1-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 16-ந் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், ஏப்ரல் 16-ந் தேதியுடன் தேர்வுகள் முடிந்து ஏப்ரல் 17-ந் தேதி முதல் கோடை விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்த ஆண்டு கோடை விடுமுறை தினம் 45 நாட்கள் ஆக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், வரும் ஏப்ரல் 25ஆம் தேதிவரை ஆசிரியர்கள் மட்டும் பள்ளிகளுக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

ஏப்ரல் 17-ந் தேதி தொடங்கும் கோடை விடுமுறை மே 31-ந் தேதியுடன் நிறைவடைந்து ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதாவது, 4ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். 1ஆம் வகுப்பு முதல் 3ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 4ஆம் தேதி (வியாழன்) வகுப்புகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.