☰
×

பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்! +1, +2 மாணவர்களுக்கு டிசம்பரில் சைக்கிள் விநியோகம்!

 

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் 5 லட்சம் மாணவர்களுக்கு, நவீன வடிவமைப்பில் சைக்கிள்கள் வழங்க, அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி, முந்தைய ஆட்சியில் வழங்கப்பட்டதை விட எடை குறைவாகவும், உறுதியாகவும் சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளன.

இரவிலும், போதிய வெளிச்சமில்லாத நேரங்களிலும் ஒளிரும் வகையில், முன்பகுதி மற்றும் பின் பகுதியில் பிரதிபலிப்பு 'ஸ்டிக்கர்' ஒட்டப்பட உள்ளது. மேம்படுத்தப்பட்ட 'பிரேக் சிஸ்டம்' மற்றும் பைகளை எளிதாக எடுத்து செல்லும் வகையில், பெரிய 'கேரியர்' பொருத்தப்பட உள்ளது. தண்ணீர் பாட்டில், புத்தகம் வைப்பதற்கான வசதிகளும் செய்யப்பட உள்ளன.

மாணவர்களுக்கு ராணுவ பச்சை நிறத்திலும், மாணவியருக்கு வெளிர் ஊதா நிறத்திலும் சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளன. சைக்கிள் வழங்கும் பணியை, டிசம்பர் மாத இறுதியில் தொடங்க, முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையே, பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை வாயிலாக சைக்கிள் கொள்முதலுக்கு 'டெண்டர்' கோரப்பட்டு இருந்தது.

அதற்கான கால அவகாசம் முடிந்த நிலையில், அக்.13 வரை நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது.