×

ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்..! தாயுமானவர் திட்டத்தில் சலுகை அறிவிப்பு..! 

 

தமிழகத்தில் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு அவர்களது வீட்டிற்கே சென்று ரேஷன் பொருட்களை வினியோகம் செய்து வருகின்றனர். இதில் அக்குடும்ப தலைவரின் கைவிரல் ரேகை மற்றும் கண் கருவிழி சரிபார்ப்பு முறைப்படி பதிவேற்றம் செய்து, விற்பனையாளர்கள் மாதத்தில் இரண்டு நாட்கள் வீட்டிற்கே சென்று ரேஷன் பொருட்களை வழங்கி வருகின்றனர்.
 

ரேஷன் விற்பனையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 4 ஜி., சர்வர் அடிக்கடி பழுதாவதும், செயல்படாமல் போவதால், கைவிரல் ரேகை, கண் கருவிழி சரிபார்ப்பதில் சிரமம் ஏற்படுவதாக ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம் கூறியது.
 

இதையடுத்து இத்திட்டத்தில் ரேஷன் பொருட்கள் பெறும் முதியோர், மாற்றுத்திறனாளிகளின் கைரேகை, கண் கருவிழி பதிவாகவில்லை எனில், உரிய பதிவேட்டில் கையெழுத்து மட்டும் பெற்றுக்கொண்டு ரேஷன் பொருட்களை தடையின்றி விடுவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.