நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்! திடீரென சரிந்த தங்கம் விலை..!
அமெரிக்க ஃபெடரல் வங்கி மேலும் வட்டி விகிதத்தை அதிகரிக்க திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, மேற்காசியாவில் நிலவி வரும் போர் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் தங்கம் விலை இப்போதைக்கு ஏற வாய்ப்பில்லை என்கின்றனர். எனினும், இந்த சரிவு தற்காலிகமானது தான் என்றும் கூறுகின்றனர் நிபுணர்கள்.
தங்கம் விலையானது கடந்த வாரம் முழுக்க தொடர்ந்து இறங்கி நகைப்பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. எனினும், தங்கம் விலை மேலும் குறையுமா? அல்லது மீண்டும் ஏற்றம் காணுமா? என்ற குழப்பத்தில் நகை வாடிக்கையாளர்கள் இருந்தனர். இந்நிலையில் தங்கம் வாங்க திட்டமிடுவோர் இந்த சமயத்தில் வாங்கலாம் என நிபுணர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 குறைந்து விற்பனையாகிறது. நேற்று ஒரு சவரன் ரூ.1,08,560க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ரூ.640 குறைந்து ரூ.1,07,920க்கு விற்கப்படுகிறது. மேலும் ஒரு கிராம் தங்கம் ரூ.80 குறைந்து, ரூ.13,490க்கு விற்கப்படுகிறது.
மேலும் இன்று வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.240க்கும், ஒரு கிலோ ரூ.2,40,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது