இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்..! ஒரே நாளில் பாதியாக குறைந்த தக்காளி விலை.!
தக்காளி விலையானது கடந்த சில தினங்களாக உயர தொடங்கியது. ஒரு கிலோ 60 முதல் 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்தனர். கிலோ கணக்கில் பை நிறைய தக்காளியை வாங்கி சென்ற மக்கள் குறைவான அளவே வாங்கும் நிலை உருவானது.
இந்த நிலையில் தற்போது தக்காளி வரத்து அதிகரித்ததையடுத்து விலையானது குறைந்துள்ளது. அந்த வகையில் நேற்றைய தினம் ஒரு கிலோ 50 முதல் 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி விலை இன்று ஒரு கிலோ 30 முதல் 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 3 முதல் 3அரை கிலோ தக்காளி 100 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
கோயம்பேட்டில் இன்றைய காய்கறி விலையை பொறுத்த வரை முருங்கைக்காய் ஒரு கிலோ 50ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 40, கேரட் ஒரு கிலோ 30 ரூபாய், பச்சை மிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய், கத்திரிக்காய் தரத்தை பொறுத்து 30 முதல் 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெண்டைக்காய் 50 முதல் 70 ரூபாய்க்கும், பாகற்காய் 60 ரூபாய்க்கும், சௌசௌ 40 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் 55 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 120 ரூபாய்க்கும், எழுமிச்சைப்பழம் ஒரு கிலோ 250 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 100 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.