×

இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்..! கடந்த 3 நாட்களில் முட்டை விலை 60 காசு குறைந்தது..!

 

கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு முடிவடைந்து விட்டதால் முட்டையின் தேவை சற்று குறைந்து உள்ளது. எனவே விற்பனையை அதிகரிக்க விலை குறைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.கடந்த டிச., 23ஆம் தேதி முதல் ரூ.6.40 காசுகளுக்கு விற்கப்பட்ட முட்டை விலை, கடந்த 2 நாட்களாக 40 காசுகள் குறைந்தது.  இந்த நிலையில் இன்றும் 20 காசுகள் குறைந்துள்ளது

 

நாமக்கல்லில் முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை 20 காசுகள் குறைந்து ரூ.5.80ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முட்டை நுகர்வு, விற்பனை சரிவால் கடந்த 3 நாள்களில் 60 காசுகள் குறைந்துள்ளன.