இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்..! தமிழகத்தில் காய்கறிகளின் விலைகள் குறைந்தன...!
Nov 27, 2026, 12:35 IST
தமிழகத்தில் உள்ள காய்கறி சந்தைகளில் சின்ன வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை கணிசமாகக் குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக கிலோ ரூ.230-க்கு விற்பனை செய்யப்பட்ட சின்ன வெங்காயம், தற்போது ரூ.70 குறைந்து ரூ.160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், கிலோ ரூ.80-க்கு விற்பனையான பீன்ஸ் ரூ.40 ஆகவும், கத்திரிக்காய் ரூ.80-ல் இருந்து ரூ.30 ஆகவும் குறைந்துள்ளது. காய்கறிகளின் விலை சரிவால் பொதுமக்கள் மற்றும் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
- பெரிய வெங்காயம் 5 ரூபாய் குறைந்து 65 ரூபாய்க்கும், கர்நாடகா வெங்காயம் 50, 40 ஆகிய விலைகளிலும் விற்கப்படுகிறது.
- பீன்ஸ் ஒரு கிலோ 20 ரூபாய் குறைந்து 40, 30, 20 ஆகிய விலைகளிலும், முள்ளங்கி 10 ரூபாய் குறைந்து 30, 25க்கு விற்கப்படுகிறது.
- உஜாலா கத்திரிக்காய் 20 ரூபாய் குறைந்து 30, 20 ஆகிய விலைகளிலும், வரி கத்திரிக்காய் 10 ரூபாய் குறைந்து 25, 20 ஆகிய விலைகளிலும் விற்பனை செய்யப்படுகிறது.
- பாவக்காய் 20 ரூபாய் குறைந்து முதல் தரம் 30, இரண்டாம் தரம் 20 ரூபாய்
- முருங்கைக்காய் 30 ரூபாய் வரை குறைந்து 100, 70 ரூபாய்
- சேமக்கிழங்கு 10 ரூபாய் குறைந்து 30, 26 ரூபாய்
- மிளகாய் 10 ரூபாய் குறைந்து 30 ரூபாய், பச்சை மிளகாய் 15 ரூபாய் குறைந்து 65, 60 ரூபாய்
- அவரைக்காய் 10 ரூபாய் குறைந்து 50, 40 ரூபாய்க்கும் எனவும் கோயம்பேட்டில் வியாபாரிகள் விற்கின்றனர்.
- எலுமிச்சை கிலோ 20 ரூபாய் குறைந்து 100, 90 ரூபாய் எனவும், குடைமிளகாய் 20 ரூபாய் குறைந்து 40, 30 ரூபாய் எனவும் விற்பனை செய்யப்படுகிறது.
- எஞ்சிய காய்கறிகளின் விலை எந்தவித மாற்றமும் இல்லை.
- ஊட்டி கேரட் 35, 30, 20 ரூபாய், மலூர் கேரட் 15, 10 ரூபாய், ஊட்டி பீட்ரூட் 60, 55 ரூபாய்
- கர்நாடகா பீட்ரூட் 30, 25 ரூபாய், சவ் சவ் 30, 20 ரூபாய், முள்ளங்கி 30, 25 ரூபாய்
- முட்டைக்கோஸ் 20, 18 ரூபாய், வெண்டைக்காய் 35, 30 ரூபாய், புடலங்காய் 35, 30 ரூபாய்
- சுரக்காய் 25, 15 ரூபாய், காலிபிளவர் 25, 20 ரூபாய், வெள்ளரிக்காய் 25, 20 ரூபாய் என விற்கப்பட்டு வருகிறது.