தங்கப் பிரியர்களுக்கு குட் நியூஸ்: 2 நாட்களில் ரூ.1,560 சரிவு..!!
தங்கம் விலை தினந்தோறும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இதற்கு உலகளாவிய நிச்சயமற்ற தன்மை, போர் பதற்றங்கள், அமெரிக்க டாலர் மதிப்பு வலுவிழத்தல் போன்ற பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. குறிப்பாக, உலக நாடுகளிடையேயான போர் பதற்றம் காரணமாக பாதுகாப்பான முதலீடாக பார்க்கப்படுகிற தங்கத்தை பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் பெருமளவில் வாங்கி சேமித்து வருகின்றன.
இதன் காரணமாக, அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்திய போதிலும் தங்கம் விலை குறையாமல் தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. அவ்வபோது குறைந்து நகைப் பிரியர்களுக்கு சற்று அளித்தாலும் இனிவரும் காலங்களில் விலை ஏற்றம் இருக்கத்தான் செய்யும் என்கின்றனர் நிபுணர்கள்.
தங்கம் விலை நேற்று ஒரே நாளில் ஒரு சவரனுக்கு ரூ.1,280 குறைந்தது. நேற்று காலையில் சவரனுக்கு ரூ.320 குறைந்த நிலையில், மாலையில் மீண்டும் ரூ.960 குறைந்து, ரூ.1,09,760-க்கு விற்பனையானது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் 2 முறை குறைந்தது இல்லத்தரசிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இன்று (அக்டோபர் 13) தங்கத்தின் விலை மளமளவென சரிந்துள்ளது. 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.35 குறைந்து ரூ.13,685-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.280 குறைந்து, ரூ.1,09,480-க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை இன்று மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.245-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,45,000-க்கும் விற்பனையாகிறது.