குட் நியூஸ் சொன்ன தங்கம்..!! சவரனுக்கு ரூ.1,120 குறைந்தது..!!
Jul 6, 2026, 09:44 IST
அமெரிக்கா-ஈரான் போரின் விளைவாக கச்சா எண்ணெய் விலை ஏற்றம் கண்டது. இதனால் டாலரின் மதிப்பு கூடிய நிலையில் தங்கம் விலை சரிவை சந்தித்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் விலை ஏறத் தொடங்கியிருக்கிறது.
ஒருசில நாட்களாகவே தங்கம் விலையானது காலை, மாலை என இருவேளை ஏறத் தொடங்கியிருக்கிறது.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1120 குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்து வரும் நிலையில், இன்று சவரனுக்கு ரூ.1120 குறைந்து ரூ.1,08,480க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் தங்கம் ரூ.140 குறைந்து ரூ.13,560க்கு விற்கப்படுகிறது.
மேலும், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.250க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.10,000 குறைந்து ரூ.2,50,000க்கு விற்கப்படுகிறது.