×

குட் நியூஸ் சொன்ன தங்கம்..!! தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 குறைந்தது..!!

 
ஈரான் - அமெரிக்கா போர் எதிரொலியாக ஹோர்மூஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. இதனால் முதலீட்டாளர்களின் கவனம் கச்சா எண்ணெய் பக்கம் திரும்பியது இதனால் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தது.
இதனால் தங்கத்தின் விலை குறைய தொடங்கியது. மேலும் சர்வதேச பொருளாதார நிலை, அமெரிக்க டாலர் மதிப்பில் மாற்றங்கள் ஆகியவை தங்கம் விலையில் பிரதிபலிக்கின்றன. தற்போது ஈரான் - அமெரிக்கா போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதால் மீண்டும் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இன்று யாரும் எதிர்பார்க்காத வகையில் தங்கம் விலை அதிரடியாக குறைந்தது.
ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (ஏப்., 16) ஒரு கிராம் ரூ.14,360-க்கும், சவரன் ரூ.1,14,880-க்கும் விற்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று (ஏப்., 17) கிராமுக்கு ரூ.150 குறைந்து ரூ.14,210-க்கும், சவரனுக்கு ரூ.1,200 குறைந்து ரூ.1,13,680-க்கும்விற்பனையாகிறது.
அதேபோல் வெள்ளி விலை மாற்றம் ஏதும் இன்றி ஒரு கிராம் ரூ.275-க்கும்,
ஒரு கிலோ ரூ.2,75,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.