முட்டை பிரியர்களுக்கு குட்நியூஸ்
Jul 24, 2026, 18:28 IST
நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை ஒரே நாளில் 30 காசுகள் சரிந்து ஒரு முட்டை விலை ரூ.6.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை ரூ.6.80 வரை உயர்ந்து உச்சத்தில் இருந்த நிலையில், தற்போது ஒரே நாளில் 30 காசுகள் சரிந்து ஒரு முட்டை விலை ரூ.6.50 ஆக குறைந்துள்ளது. இதனால் நாமக்கல்லில் ரூ.6.50க்கும், சென்னையில் ரூ.7.30க்கும் முட்டை விற்பனை செய்யப்படுகிறது. 8 நாட்களுக்குப் பிறகு விலை குறைந்துள்ளதால் நுகர்வோர்களும் முட்டை பிரியர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.