☰
×

மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்..! அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு..!

 

மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் உயர்த்த ஒப்புதல் வழங்கப்பட்டது. இதன்மூலம், 49 லட்சம் அரசு ஊழியர்களும் 69 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவர்.வழக்கமாக ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. தற்போது உயர்த்தப்பட்ட அகவிலைப்படி உயர்வு மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனசாக அமைந்தது

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை நிவாரணம் (DR) ஆகியவற்றை 3 சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இத்தகவலைத் தெரிவித்துள்ளார். அக்டோபர் 28, 2026 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டது. இத்திட்டம் சுமார் 48.54 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கும், 68.71 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கும் பலனளிக்கும்.

பிரதமர் நரேந்திர மோடியின் தீபாவளிப் பரிசாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த உயர்வு, ஜூலை 1, 2026 முதல் நிலுவையுடன் அமலுக்கு வரும் என்று பத்திரிகை தகவல் பணியகம் (PIB) தெரிவித்துள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் அடிப்படைச் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தில் 60 சதவீதத்திலிருந்து 63 சதவீதமாக உயர்கிறது. இந்த முடிவால் அரசுக்கு ஆண்டுக்கு ₹10,016.10 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும். 7-வது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி இந்த உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்தைப் பொறுத்து அவர்களுக்குக் கிடைக்கும் கூடுதல் தொகை மாறுபடும். உதாரணமாக, ₹18,000 அடிப்படைச் சம்பளம் வாங்குபவருக்கு மாதத்திற்கு ₹540-ம், ₹25,000 வாங்குபவருக்கு ₹750-ம், ₹50,000 வாங்குபவருக்கு மாதத்திற்கு ₹1,500-ம் கூடுதலாகக் கிடைக்கும். ஜூலை 1, 2026 முதல் இது அமல்படுத்தப்படுவதால், இடைப்பட்ட மாதங்களுக்கான நிலுவைத் தொகையையும் (Arrears) ஊழியர்கள் பெறுவார்கள்.

அதேபோல், ஓய்வூதியதாரர்களில் ₹20,000 அடிப்படை ஓய்வூதியம் பெறுபவருக்கு மாதம் ₹600-ம், ₹30,000 பெறுபவருக்கு மாதம் ₹900-ம் கூடுதலாகக் கிடைக்கும். பணவீக்கத்தால் ஏற்படும் விலையேற்றத்தைச் சமாளிக்க அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டிற்கு இருமுறை (ஜனவரி மற்றும் ஜூலை) இந்த அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.