×

குட் நியூஸ்..! இனி வாட்ஸ்அப்பை பயன்படுத்த போன் நம்பர் தேவையில்லை.!  

 

உலகம் முழுவதும் வாட்ஸ் அப்.செயலி இல்லாத ஸ்மார்ட்போனே இல்லை எனக் கூறும் அளவிற்கு ஒவ்வொரு நொடியும் கோடிக்கணக்கானவர்கள் இந்த whatsapp செயலியை பயன்படுத்துகிறார்கள்.சாதாரண ஒரு மெசேஜிங் பிளாட்பார்மாக தொடங்கிய இந்த வாட்ஸ் அப் செயலி பின்னர் வீடியோ கால் வசதி , ஆடியோ வாய்ஸ் வசதி, குரூப் கால் வசதி என பல்வேறு வசதிகளை நவீன தொழில்நுட்பங்களின் வளர்ச்சிக்கு ஏற்ப கொடுத்த வண்ணம் இருக்கிறது . தற்போது வாட்ஸ் அப் ஒரு புதிய வசதியை பரிசோதனை செய்து வருவது தெரிய வந்திருக்கிறது.

அதன்படி உங்களுடைய நம்பரை பகிராமலேயே மற்ற நபர்களை நீங்கள் வாட்ஸ் அப்பில் தொடர்பு கொள்ளக்கூடிய ஒரு சேவையை வாட்ஸ் அப் பரிசோதனை செய்து வருவது தெரிய வந்திருக்கிறது .

ஒருவரிடம் வாட்ஸ் அப்பில் தொடர்பு கொள்ள வேண்டுமென்றால் அந்த நபருடைய மொபைல் எண் நமக்கு கட்டாயம் தேவை. மொபைல் எண் அடிப்படையில் தான் நம் வாட்ஸ் அப் வாயிலாக குறிப்பிட்ட நபரை தொடர்பு கொள்ள வேண்டும். ஆனால் கூடிய விரைவில் வாட்ஸ் அப்பில் யூசர் நேம் என்ற ஒரு புதிய சேவை அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

இந்த புதிய சேவையின் படி ஒரு நபரின் போன் நம்பர் இல்லாமல் அவருடைய யூசர்நேமை கொண்டே நாம் அவருடன் வாட்ஸப் வாயிலாக தொடர்பு கொள்ள முடியும்.

இதன்படி வருகின்ற ஜூன் மாதத்திற்குள் வாட்ஸ்அப்பை மொபைல் நம்பர் இல்லாமல் பயன்படுத்த முடியும். ஏற்கனவே வாட்ஸ்அப்பை பயன்படுத்துபவர்களின் தனிப்பட்ட தகவல்களை மற்றவர்கள் பார்க்கும்போது, இனி மொபைல் எண் தெரியாது.

மாறாக அவர்களின் பயனர் பெயர் மட்டுமே தெரியும். இதன் மூலம் தனியுரிமை பாதுகாப்பு வசதியை அதிகப்படுத்துவதோடு, தேவையற்ற மோசடி மெசேஜ்களையும் தவிர்க்க முடியும் என மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனால் அறிமுகம் இல்லாதவர்களிடம் உங்கள் மொபைல் எண்ணை பகிர வேண்டிய அவசியம் இருக்காது

தனிநபர்களின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்த, பயனர் பெயருடன் சேர்த்து 4 இலக்க பின் வசதியையும் மெட்டா நிறுவனம் சோதித்து வருகிறது.

உங்கள் பயனர் பெயர் தெரிந்தாலும், இந்த பின் நம்பர் தெரிந்தால் மட்டுமே புதியவர்கள் உங்களுக்கு மெசேஜ் அனுப்ப முடியும். இது குறிப்பாக ஸ்பேம் மெசேஜ்களைத் தடுக்க பெரிதும் உதவும்.

இந்த வசதியை பயன்படுத்திக் கொள்வது, அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது. முன்பு இருந்ததைப் போல் போன் நம்பர் மூலமே தொடர்புகொள்ள விரும்புபவர்கள் அப்படியே கூட தொடரலாம்.

மேலும் ​ஏற்கனவே உங்கள் போன் நம்பரை வைத்திருப்பவர்களுக்கு, அது தொடர்ந்து தெரியும். புதிய நபர்களுக்கு மட்டும் போன் நம்பரை மறைக்க இது உதவும்.