×

குட் நியூஸ்..! மகளிர் உரிமை தொகை நிலம் வைத்திருப்பவர்களுக்கும் கிடைக்கும்: அரசு அறிவிப்பு..!

 

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் 1.15 கோடி பெண்கள் பயனாளிகளாக இருக்கும் நிலையில், விரைவில் பல லட்சம் பெண்கள் புதிய பயனாளிகளாக இத்திட்டத்தில் சேர்க்கப்பட இருக்கின்றனர். உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்தி முடிக்கப்பட்ட மாவட்டங்களில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் சேருவதற்கு தகுதியான பெண்களை தேர்வு செய்யும் பணி ஜோராக நடக்கிறது.  

இன்னும் சில மாவட்டங்களில் மட்டும் இறுதி கட்ட உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நடைபெற்று வருகின்றன. நவம்பர் 14 ஆம் தேதியோடு அனைத்து முகாம்களும் நிறைவு பெற இருக்கின்றன.   

எனவே, உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடக்கும் மாவட்டங்களில் யாரேனும் இன்னும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்காமல் இருந்தால் உடனே விண்ணப்பிக்கவும். முகாம்கள் முடிந்த மாவட்டங்களில் பயனாளிகளை தேர்வு செய்வதற்கான பணிகளை அரசு மும்முரமாக செய்யத் தொடங்கி விட்டது.  

விண்ணப்பித்த பெண்கள் பலரும் தங்களுக்கு ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் கிடைக்குமா? கிடைக்காதா? என ஆவலோடு காத்திருக்கிறார்கள்.   

அவர்களுக்கு எல்லாம் நவம்பர் முதல் வாரத்தில் அல்லது 2வது வாரத்தில் ’மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் நீங்கள் பயனாளியாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறீர்கள்’ என்ற அதிகாரப்பூர்வ மெசேஜ் அரசிடமிருந்து சென்றுவிடும். இருப்பினும், நிலம் வைத்திருக்கும் பெண்களுக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது. மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்கும்போது தாங்கள் நில ஆவணங்கள் எதையும் இணைக்கவில்லையே, இதனால் தங்களின் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுவிடுமோ என பயத்தில் உள்ளனர்.  

அவர்கள் உண்மையில் பயப்படத் தேவையில்லை. 5 ஏக்கர் நன்செய், 10 ஏக்கர் புன்செய் என்ற அளவில் இருப்பவர்கள் இத்திட்டத்தில் பயனாளியாக சேர்க்கப்படுவார்கள். அவர்களுக்கும் அரசு மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 மாதந்தோறும் கிடைக்கும்.  நிலம் வைத்திருப்பவர்கள் நில ஆவணங்களை இணைக்கத் தேவையில்லை என அரசு ஏற்கனவே தெரிவித்துவிட்டது.   

அதனால் விண்ணப்பித்தவர்கள் நில ஆவணங்கள் இணைக்கவில்லையே என்ற சந்தேகம் கலந்த பயத்தில் இருக்க வேண்டாம். மகளிர் உரிமைத் தொகை விதிமுறைகளை பூர்த்தி செய்தால் உங்களுக்கு கட்டாயம் ரூ.1000 உண்டு.