குட் நியூஸ்..! அடுத்தாண்டு முதல் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து - மாநில அரசு முடிவு..!
10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண்கள் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. ஏனெனில் 10ஆம் வகுப்பில் எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் தான், எந்த குரூப்பை 11,12ஆம் வகுப்பில் தேர்வு செய்ய முடியும்.
இந்த நிலையில், 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது, தெலங்கானா அரசு அம்மாநிலத்தில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்ய முடிவு செய்துள்ளது. அடுத்த கல்வியாண்டு முதல் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை முழுமையாக ரத்து செய்ய தெலங்கானா அரசு முடிவு செய்துள்ளது.
மாணவர்களின் கல்வி சுமையை குறைத்து, இடைநிற்றலை தடுப்பதை நோக்கமாக கொண்டு, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார். தெலங்கானாவில் 10ஆம் வகுப்புக்கு பிறகு இடைநிற்றல் அதிகரித்ததே தொடர்ந்து, இந்த நடவடிக்கையை மாநில அரசு தெரிவித்துள்ளது.தெலங்கானா புதிய கொள்கையின் கீழ் மாணவர்களுக்கு 10ஆம் வகுப்பில் பொதுத் தேர்வு என்ற அழுத்தம் இருக்காது என்றும் மாறாக தொடர்ச்சியாக மதிப்பீடு மற்றும் ஒட்டுமொத்த கல்வி மேம்படும் என்றும் தெலங்கானா அரசு தெரிவித்துள்ளது. மாணவர்களின் சுமையும் பெருமளவில் குறையக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் பெரும்பாலான மாநிலங்களில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு என்பது கட்டாயமாக இருக்கும் நிலையில், தெலங்கானா அரசு எடுத்துள்ள இந்த முடிவு முக்கியமாக பார்க்கப்படுகிறது.