×

குட் நியூஸ்..! தமிழகத்தில் பள்ளிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை அறிவிப்பு..!  

 

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை வரும் 15 ம் தேதி உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக பொருட்கள் வாங்கும் பணிகளில் மக்கள் மும்முரமாக உள்ளனர். பொங்கலான 15 முதல் 18 வரை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் பொங்கலுக்கு முந்தைய தினமான போகி பண்டிகைக்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை.

அன்றைய நாளும் விடுமுறை அறிவிக்க வேண்டும் என அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட தமிழக அரசு 14 ம் தேதிக்கும் விடுமுறை அறிவித்துள்ளது. இதனையடுத்து 14 முதல்18 ம் தேதி வரை அரசு விடுமுறை நாட்களாக அமைந்துள்ளது.