×

குட் நியூஸ்..!  அரசு பள்ளி மாணவர்களுக்கு புத்தகப்பை, ஷூ வாங்க தலா ரூ.1000 நிதியுதவி..!! 

 

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கூறுகையில், புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு புத்தகப்பை மற்றும் ஷூ வழங்குவது வழக்கமாக இருந்தாலும், தேர்தல் காலத்தில் அவற்றை நேரடியாக வழங்குவதில் சிரமங்கள் ஏற்படுவதாக தெரிவித்தார்.ஆகையால் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு புத்தகப்பை மற்றும் ஷூ வாங்கும் வகையில் தலா ரூ.1000 நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

மாணவர்களுக்கு வழங்கப்படும் இந்த தொகை நேரடியாக அவர்களின் பெற்றோரின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்றும், குறிப்பாக தாயின் வங்கி கணக்கில் பணம் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதனால் மாணவர்களுக்கு தேவையான பொருட்களை அவர்கள் விருப்பப்படி வாங்கிக் கொள்ளும் வகையில் பணமாக வழங்க அரசு முடிவு செய்துள்ளது என்றார். இந்த திட்டத்தின் கீழ் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் சுமார் 80 ஆயிரம் மாணவர்கள் பயன் பெற உள்ளனர்.இந்த நிதியுதவியின் மூலம் எளிதாக வாங்கிக் கொள்ள முடியும் என்றும் முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்