குட் நியூஸ்..! சசுங்கச்சாவடி கட்டண குறைப்புஅமலுக்கு வந்தது!
தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் தமிழகத்தில் மொத்தம் 78 சுங்கச்சாவடிகள் செயல்பாட்டில் உள்ளன. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 12 சுங்கச்சாவடிகள் திறக்கப்பட்டு உள்ளன. இதில் 40 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1-ந்தேதியும், மீதமுள்ள சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1-ந்தேதியும் கட்டணம் மாற்றி அமைக்கப்படும்.
இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திருத்தப்பட்ட கட்டணங்களின்படி சென்னை நெடுஞ்சாலையில் 19 கிலோ மீட்டர் முதல் 32 கிலோ மீட்டர் வரையிலான தொலைதூரத்திற்கு கட்டணம் திருத்தப்பட்டது.அதன்படி சென்னை அம்பத்தூர் அருகே உள்ள சூரப்பட்டு சுங்கச்சாவடியில் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.
மாவட்ட பதிவெண் கொண்ட வணிக பயன்பாட்டிற்கான வாகனங்களுக்கு 40 ரூபாயிலிருந்து 35 ரூபாயாகக் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.
கார், ஜீப், வேன் மற்றும் இலகுரக வாகனங்களுக்கான கட்டண தொகை எவ்வித மாற்றமும் இன்றி 75 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
பேருந்து, லாரிகளுக்கான கட்டணம் ரூ.255-லிருந்து ரூ.250 ஆக குறைக்கப்பட்டுள்ளது.