குட் நியூஸ்..! சென்னையில் புதிய ஏசி மின்சார ரயில் சேவை..!
சென்னை பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று ஏசி மின்சார ரயில் சேவையை தொடங்க தெற்கு ரயில்வே முடிவு செய்தது.இந்த ஏசி மின்சார ரயிலில் அமர்ந்தபடி 1,116 பேரும், நின்றபடி 3 ஆயிரத்து 798 பேரும் என மொத்தம் 4 ஆயிரத்து 914 பயணிகள் பயணம் செய்ய முடியும். இந்த ஏசி மின்சார ரயிலானது அதிகபட்சமாக மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் செல்லும். முதல்ல இந்த ஏசி ரயில் தாம்பரம் பணிமனையில இருந்து அதிகாலை 5.45 மணிக்குக் கிளம்பும். காலை 6.45 மணிக்கு சென்னை கடற்கரைக்கு வந்து சேரும். சென்னை கடற்கரையில இருந்து காலை 7.00 மணிக்குக் கிளம்பி தாம்பரத்துக்கு 7.48 மணிக்கும், செங்கல்பட்டுக்கு காலை 8.35 மணிக்கும் செல்லும்.
இதேபோல் சென்னை கடற்கரையில இருந்து மதியம் 3.45, இரவு 7.35 மணிக்குக் கிளம்புற ஏசி ரயில், தாம்பரத்துக்கு மாலை 4.20, இரவு 8.30 மணிக்கும், செங்கல்பட்டுக்கு மாலை 5.25 மணிக்குப் போய்ச் சேரும். சென்னை கடற்கரையில இருந்து இரவு 7.35 மணிக்கு புறப்படும் ரயில் தாம்பரம் வரை செல்லும். மறுபடியும், செங்கல்பட்டில் இருந்து காலை 9.00 மணி, மாலை 5.45 மணிக்குக் கிளம்புற ஏசி ரயில், தாம்பரத்துக்கு காலை 9.38 மணி, மாலை 6.23 மணிக்கும், சென்னை கடற்கரைக்கு காலை 10.30 மணி, இரவு 7.15 மணிக்கும் வந்து சேரும். சென்னை புறநகர் பாதையில் ஏசி மின்சார ரயில் சாதாரண ரயில்களை போலவே கடற்கரை - தாம்பரம் இடையே அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும்.
சென்னை கடற்கரை – செங்கல்பட்டு பாதையில் இயக்கப்பட்டு, பயணிகளிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.இந்நிலையில் இரண்டாவது கட்டமாக ஏசி மின்சார ரயிலை சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் இடையே தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.அதுவும் வெயில் வாட்டி வதைக்க தொடங்கியிருக்கும் நிலையில், கோடைக்காலத்தில் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிப்பதோடு, குளு குளுவென ஏசியில் பயணிக்க முடியும் என்பதால் பயணிகள் மத்தியில் இந்த ரயில் சேவைக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த ரயில் சென்னை செண்ட்ரல் - அரக்கோணத்திற்கு வெறும் 2 மணி நேரத்தில் சென்றுவிடும். தற்போது செல்லும் புறநகர் மின்சார ரயில்கள் 3 மணி வரை எடுத்துக்கொள்கின்றன.