×

குட் நியூஸ்..! 2 நாளில் தங்கம் விலை ரூ.15 ஆயிரமும் வெள்ளி விலை ரூ.75 ஆயிரமும் குறைந்தது..!

 

தங்கம் விலைக்கு நிகராக அதிகரித்து வந்த வெள்ளி விலை நேற்று முதல் குறைய தொடங்கியுள்ளது. 

நேற்று (ஜன 30) தங்கம் விலை கிராமுக்கு ரூ. 950 குறைந்து ரூ. 15,850க்கு விற்பனையான நிலையில், இரண்டாவது நாளாக இன்று மீண்டும் கிராமுக்கு ரூ. 950 குறைந்து ஒரு கிராம் ரூ. 14,900க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 7,600 குறைந்து ரூ. 1,26,800க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று மீண்டும் ரூ. 7,600 குறைந்து ரூ. 1,19,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று தங்கம் விலை குறைந்ததைத் தொடர்ந்து, வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ. 20 குறைந்து ரூ. 405க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று மேலும் ரூ. 55 குறைந்து ஒரு கிராம் ரூ. 350க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி கிலோவுக்கு ரூ. 55,000 குறைந்து ஒரு கிலோ ரூ. 3,50,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.