×

குட் நியூஸ்..! இன்றும் சற்று குறைந்த தங்கம் விலை: ஒரு சவரன் விலை எவ்வளவு தெரியுமா?  

 

இந்திய மக்களின் சேமிப்பில் ஒன்றாக கருதப்படும் தங்கம் நாளுக்கு நாள் அபரிதமான மாற்றத்தைக் கண்டு வருகிறது. குறிப்பாக, மேற்காசிய போர் காரணமாக நாள்தோறும் தங்கம் விலையில் மாற்றம் நிகழ்கிறது. முன்பெல்லாம், தங்கத்தின் விலை ஒரு வாரம் ஏற்றமாகவும், ஒரு வாரம் சரிவாகவும் இருந்து வந்தது.

ஆனால், கடந்த 5ஆம் தேதியில் இருந்து ஒரு நாள் அதிக விலை ஏறுவதும், மறுநாள் குறைவதுமாக இருந்து வருகிறது. 

இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.1,12,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.14,060-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.260-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.