×

இன்றும் உயர்ந்த தங்கம் விலை..!!

 

சர்வதேச அளவில் தங்கம் விலை பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. கடந்த வாரம் வரை அமெரிக்க டாலர் மிகவும் வலுவாக இருந்ததால், முதலீட்டாளர்கள் அதிக லாபம் தருகிற மற்ற முதலீடுகளின் மீது கவனம் செலுத்தி வந்தனர்.

மேலும் இன்னும் ஒரு சில வாரங்களில் அமெரிக்க ஃபெடரல் வங்கியானது வட்டி விகிதத்தை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அங்கு வேலைவாய்ப்பின்மை காரணமாக தற்போதைக்கு வட்டி விகிதம் உயர வாய்ப்பில்லை எனத் தெரிகிறது.

 

இதனால் பாதுகாப்பான முதலீடாக பார்க்கப்படுகிற தங்கத்தின் மீது உலக நாடுகள் கவனம் செலுத்தி வருகின்றன. இது உலகளவிலான தங்கம் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. பொதுவாக உலகளவில் தங்கம் விலை உயரும்போது, அதிகளவில் தங்கம் இறக்குமதி செய்கிற இந்தியாவிலும் தங்கம் விலை உயர்வது சகஜம் தான்.

தங்கத்தின் விலையானது நேற்று காலையில் இறங்கிய நிலையில் மாலையில் அதிகரித்தது. இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலையானது கிராம் ஒன்றுக்கு 20 ரூபாய் அதிகரித்து 14,220 ரூபாய்க்கும், சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து 1,13,760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

அதே நேரம் வெள்ளி விலையானது எந்தவித மாற்றமும் இல்லாமல் கிராம் ஒன்று 255 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

 

தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் :

ஆபரணத் தங்கம் (22 காரட்) 1 கிராம் - ரூ. 14,040

ஆபரணத் தங்கம் (22 காரட்) 1 சவரன் - ரூ. 1,12,320

வெள்ளி ஒரு கிராம் - ரூ. 255

வெள்ளி ஒரு கிலோ - ரூ. 2,55,000

கடந்த 10 நாட்களில் 22 காரட் தங்கத்தின் விலை

தேதி ஒரு கிராம் தங்கம் (ரூ.) சவரன் விலை (ரூ.)
ஆகஸ்ட் 14 ரூ. 14,040 ரூ. 1,12,320
ஆகஸ்ட் 13 ரூ. 14,220 ரூ. 1,13,720
ஆகஸ்ட் 12 ரூ. 14,200 ரூ. 1,13,600
ஆகஸ்ட் 11 ரூ. 14,150 ரூ. 1,13,200
ஆகஸ்ட் 10 ரூ. 13,950 ரூ. 1,11,600
ஆகஸ்ட் 9 ரூ. 13,965 ரூ. 1,11,720
ஆகஸ்ட் 8 ரூ. 13,965 ரூ. 1,11,720
ஆகஸ்ட் 7 ரூ. 13,900 ரூ. 1,11,200
ஆகஸ்ட் 6 ரூ. 13,750 ரூ. 1,10,000
ஆகஸ்ட் 5 ரூ. 13,480 ரூ. 1,07,840

வெள்ளி விலை

வெள்ளி விலையானது ஆக்ஸ்ட் 11 அன்று கிராமுக்கு ரூ. 10 அதிகரித்து ரூ. 260-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், கடந்த இரண்டு நாட்களாக விலை மாற்றமின்றி அதே விலையில் விற்பனையானது.

இந்நிலையில் இன்று கிராமுக்கு ரூ. 5 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ. 255-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, இன்று கிலோவுக்கு ரூ. 5,000 குறைந்து ஒரு கிலோ வெள்ளியானது ரூ. 2,55,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.