×

குட் நியூஸ்..! 5 நாட்களில் ரூ.6,520 குறைந்த தங்கம் விலை..!  
 

 

இஸ்ரேல் - ஈரான் போர் காரணமாக பங்குச்சந்தை வீழ்ச்சியடைந்து வருகிறது. அதே நேரத்தில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது. இதனால் தங்கம் விலை கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், போர் தொடங்கிய முதல் நாளில் தங்கம் விலை உச்சம் தொட்டது. பின்னர் அடுத்தடுத்த நாட்களில் விலை குறைந்து வருகிறது.


தமிழகத்தில் மார்ச் 3ம் தேதி ஆபரண தங்கம் கிராம், 15,465 ரூபாய்க்கும், சவரன், 1,23,720 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 315 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

மார்ச் 04ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு, 265 ரூபாய் குறைந்து, 15,200 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 2,120 ரூபாய் சரிவடைந்து, 1,21,600 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு, 20 ரூபாய் குறைந்து, 295 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு 20,000 ரூபாய் சரிவடைந்து, 2.95 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.

நேற்று (மார்ச் 05) ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 640 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 1,20, 960 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 15,120 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் 295 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று (மார்ச் 06) ரூ.160 குறைந்து ஒரு கிராம் ரூ. 14,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, நேற்று சவரனுக்கு ரூ.640, குறைந்து ரூ. 1,20,960க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ரூ. 1,280 குறைந்து ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ. 1,19,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது.ங்கம் விலை 5 நாட்களில் 6,520 ரூபாய் குறைந்து விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை

நேற்று (மார்ச் 5) வெள்ளி விலையில் மாற்றம் ஏதுமின்றி ஒரு கிராம் ரூ. 295-க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று (மார்ச் 6) ரூ.5 குறைந்து, ஒரு கிராம் ரூ. 290-க்கு விற்கப்படுகிறது. அதன்படி, கிலோவுக்கு ரூ. 5,000 குறைந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ. 2,90,000க்கு விற்கப்படுகிறது.


கடந்த 10 நாட்களில் 22 காரட் தங்கத்தின் விலை :

தேதி கிராம் விலை (ரூ.) சவரன் விலை (ரூ.)
மார்ச் 6 ரூ. 14,960 ரூ. 1,19,680
மார்ச் 5 ரூ. 15,120 ரூ. 1,20,960
மார்ச் 4 ரூ. 15,200 ரூ. 1,21,600
    மார்ச் 3           ரூ. 15,465          ரூ. 1,23,720
   மார்ச் 2            ரூ.15,660          ரூ.1,25,280
மார்ச் 1            ரூ.15,775           ரூ.1,26,200
பிப்ரவரி 28            ரூ.15,550          ரூ.1,24,400
பிப்ரவரி 27            ரூ.14,900          ரூ.1,19,200
பிப்ரவரி 26            ரூ.14,920          ரூ.1,19,360
பிப்ரவரி 25            ரூ.14,930          ரூ.1,19,440