குட் நியூஸ்..! தங்கம் விலை சவரனுக்கு ரூ.1720 அதிரடியாக குறைந்தது..!!
தங்கம் விலை கடந்த ஆண்டு வரலாறு காணாத உச்சம் தொட்டது. தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை கடந்த ஆண்டு இறுதியில் சவரன் ஒரு லட்சம் ரூபாயை தொட்டது. இது தங்க நகை பிரியர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த ஆண்டு இது மேலும் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டது. அதற்கேற்ப இந்த ஆண்டு தொடக்கம் முதலே தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது.
கடந்த மாதம் 28-ந்தேதி புதிய உச்சத்தை தொட்டு, பிறகு விறுவிறுவென இறங்கியது. அப்படியாக விலை குறைந்து வந்து, கடந்த ஒரு வாரமாக மீண்டும் ஏற்றத்திலேயே தங்கம் விலை இருந்து வருகிறது.
நேற்று தங்கம் விலை அதிகரித்தது. அதன்படி சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,320 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.1,15,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.515 அதிகரித்து. ஒரு கிராம் ரூ.14,415-க்கு விற்பனை செய்யப்பட்டது.
முன்னதாக நேற்று காலை சவரனுக்கு ரூ. 2,800 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,14,000 -க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன்மூலம் ஒரேநாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.4,120 அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
தங்கம் விலை இன்று (ஜன., 22) சற்று குறைந்து ஆறுதல் அளித்துள்ளது. நேற்று (ஜன., 21) ஒரு சவரன் ரூ. 115,320க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ.1,720 குறைந்து, ஒரு சவரன் ரூ. 113,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் ஒரு கிராம் நேற்று ரூ.14,415க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ஒரு கிராம் ரூ.215 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.340க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.5,000 குறைந்து ரூ.3 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.