குட் நியூஸ்..! வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிப்பு!
2025-26 ஆம் ஆண்டிற்கான வருமான வரி அறிக்கைகள் மற்றும் தணிக்கை அறிக்கைகளை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை மத்திய நேரடி வரிகள் வாரியம் நீட்டித்துள்ளது.அதன்படி வருமான வரி தணிக்கை அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நவம்பர் 10ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
2025-26 ஆம் மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரி தணிக்கை அறிக்கைகளை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு செப்டம்பர் 30 ஆக அறிவிக்கப்பட்ட நிலையில், அக்டோபர் 31 ஆம் தேதி வரை நீட்டித்து ஏற்கனவே உத்தரவிடப்பட்டிருந்தது. வடமாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்ட காரணங்களால் வருமானவரி கணக்கை தாக்கல் செய்வதற்கு கூடுதல் அவகாசம் வழங்கும்படி இமாச்சல பிரதேசம் மற்றும் பஞ்சாப், ஹரியானா மாநில உயர்நீதிமன்றங்கள் உத்தரவிட்டிருந்தன.
இதையடுத்து, வருமான வரிக் கணக்கு மற்றும் வருமான வரி தணிக்கை அறிக்கைகளை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கு அக்டோபர் 31 ஆக இருந்த காலக்கெடு டிசம்பர் 10 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.