குட் நியூஸ்..! கோவை வழியே மற்றுமொரு வந்தே பாரத் ரயில்..!
கோவை வழியே பெங்களூரு - எர்ணாகுளம் இடையே வந்தே பாரத் ரயில் சேவை துவங்கப்படும் என ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்த ரயில் பெங்களூரில் இருந்து காலை 5 மணிக்கு புறப்பட்டு, மதியம் 2 மணிக்கு எர்னாகுளத்தை அடையும் எனவும், மொத்தம் 6 நிலையங்களில் இந்த அதிவேக ரயில் நின்று செல்லும் எனவும் கூறியுள்ளது.
திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும் இந்த ரயில் கோவை வழியே செல்லும் 3வது வந்தே பாரத் ரயிலாக இருக்கும்.
ஏற்கனவே கோவை – பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் பயன்பாட்டில் உள்ளது. இதனை பாலக்காடு வரை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது. ஏனெனில் தமிழ்நாடு – கேரளாவை இணைக்கும் வகையில் வந்தே பாரத் ரயில்கள் இல்லை.
மேலும் கொச்சியில் இருந்து சென்னை வரை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் கொச்சி – பெங்களூரு வந்தே பாரத் ரயில் வரப் பிரசாதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.