×

குட் நியூஸ்..! பள்ளி மாணவர்களுக்கு 12 நாட்கள் விடுமுறை அறிவிப்பு..! 

 

அரையாண்டு தேர்வுக்கான அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை சமீபத்தில் வெளியிட்டது. அதில் 6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு டிசம்பர் 15-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி வரையிலும், 10 மற்றும் 12-ம் வகுப்பிற்கு டிசம்பர் 10-ம் தேதி தேர்வுகள் தொடங்கி 23-ம் தேதி வரையும் நடைபெறுகிறது.

6ம் வகுப்புக்கு காலை 10 மணி முதல் 12 மணி வரையிலும், 7ம் வகுப்புக்கு பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரையிலும், 8ம் வகுப்புக்கு 10 மணி முதல் 12.30 மணி வரையிலும், 9ம் வகுப்புக்கு பிற்பகல் 2 மணி முதல் 4.30 மணி வரையிலும், 10ம் வகுப்புக்கு காலை 9.45 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும், 11ம் வகுப்புக்கு பிற்பகல் 1.45 மணி முதல் மாலை 5 மணி வரையிலும், 12ம் வகுப்புக்கு காலை 9.45 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும் தேர்வுகள் நடைபெற உள்ளது.

டிசம்பர் 24ம் தேதி புதன் கிழமை முதல் அரையாண்டு தேர்வு விடுமுறை வருகிறது. முதலில் அரையாண்டு தேர்வு விடுமுறை 8 நாட்கள் மட்டுமே என கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது 12 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு உள்ளிட்டவைகள் அடங்கும். அரையாண்டு தேர்வு விடுமுறை 12 நாட்கள் என்பதால் பள்ளி மாணவர்கள் குஷியில் துள்ளிக்குதித்து வருகின்றனர்.