குட் நியூஸ்..! முன்னாள் ராணுவ வீரர்களுக்கான நிதியுதவி 100 சதவீதம் அதிகரிப்பு..!
Oct 16, 2025, 07:00 IST
வயதான முன்னாள் ராணுவத்தினர், ஓய்வூதியம் பெறாத முன்னாள் ராணுவத்தினர் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்ட விதவைகளுக்கு நிலையான வாழ்நாள் ஆதரவை வழங்கும் வகையில், பயனாளி ஒருவருக்கு மாதந்தோறும் வழங்கப்படும், 4,000 ரூபாய் ஓய்வூதிய மானியம், 8,000 ரூபாயாக உயர்த்தப்படுகிறது.
இதேபோல், கல்வி மானிய தொகையாக வழங்கப்படும், 1,000 ரூபாய், 2,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. திருமணத்திற்கு வழங்கப்படும் மானிய தொகை, 50,000 ரூபாயில் இருந்து, ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட விகிதங்கள், வரும் நவம்பர் 1ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும்.
இவ்வாறு மத்திய அரசு வெளியிட்ட குறிப்பிடப்பட்டுள்ளது.