×

குட் நியூஸ்..!! தங்கம் விலை தாறுமாறாக குறைந்தது..!!

 

காலங்காலமாக இந்தியர்களின் முக்கிய விசேஷங்கள் மற்றும் மங்களகரமாக நிகழ்ச்சிகளில் தங்கம் இடம்பெற்று வருகிறது. அதனாலேயே தங்கமானது இந்தியர்களின் கௌரவம் மற்றும் சொத்தாக பார்க்கப்படுகிறது. ஆனால், கடந்த ஆண்டு தொடங்கியதிலிருந்தே முக்கிய நிகழ்வுகளுக்கு கூட சாமானியர்கள் சிறிதளவு தங்கம் வாங்கவே திண்டாடும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் மதிப்பு வேறாக இருக்கிறது. பாதுகாப்பான மற்றும் நிரந்தரமான முதலீடாக பார்க்கப்படுகிற தங்கத்தின் மீது முதலீடு செய்வதில் உலக நாடுகள் மிகுந்த ஆர்வம் காட்டி வந்தன. அதனை திசைதிருப்பும் வகையில் அமைந்தது கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி தொடங்கிய அமெரிக்கா - ஈரான் போர். இந்த போருக்கு பிறகு, எதிர்பாராத அளவில் தங்கம் விலை குறைந்திருக்கிறது.

சுமார் மூன்று மாதங்களுக்கு பிறகு ஒரு வழியாக போர் முடிவுக்கு வந்தாலும், அதனால் ஏற்பட்ட தாக்கங்களால் இன்னும் தங்கம் விலை உச்ச விலையில் களமாடி வருகிரது. கச்சா எண்ணெய் விலை சீரானாலும், டாலர் மதிப்பு இறங்கும் வரை தங்கம் விலை ஏற்றம் காண வாய்ப்பில்லை என்கின்றனர் நிபுணர்கள்.

இன்று (ஜூன்.30) தங்கம் விலை சவரனுக்கு ரூ.2160 குறைந்துள்ளது. நேற்று ஒரு சவரன் ரூ.1,06,400க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ரூ.2160 குறைந்து ரூ.1,04,240க்கு விற்கப்படுகிறது.

அதே போல ஒரு கிராம் தங்கம் விலை ரூ.270 குறைந்து ரூ.13,030க்கு விற்கப்படுகிறது.

மேலும் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.5 குறைந்து ரூ.240க்கு விற்கப்படுகிறது.

மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.5000 குறைந்து ரூ.2,40,000க்கு விற்கப்படுகிறது.