×

குட் நியூஸ்..!! தங்கம் விலை மிகப்பெரிய அளவில் குறைந்தது..!!

 

மே மாதம் முழுவதும் தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வந்த நிலையில், ஜூன் மாதம் தொடங்கியதும் குறைந்திருக்கிறது.

ஜூன் 04- ஆம் தேதி 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 20 குறைந்து ரூபாய் 14,480- க்கும், ஜூன் 05- ஆம் தேதி கிராமுக்கு ரூபாய் 50 குறைந்து ரூபாய் 14,430- க்கும் விற்பனையானது.

ஜூன் 06 ஒரு கிராமிற்கு ரூ.230 குறைந்து, ரூ.14,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,040 குறைந்துள்ளது.

ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,13,600க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ரூ.1,040 குறைந்து ரூ.1,12,560க்கு விற்கப்படுகிறது. மேலும் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.130 குறைந்து ரூ.14,070க்கு விற்கப்படுகிறது.

அதே போல வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.270க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.2,70,000க்கு விற்கப்படுகிறது.