×

குட் நியூஸ்..!! தங்கம் விலை மளமளவென குறைந்தது..!!

 

தங்கம் விலை இந்தளவுக்கு உயரும் என நம்மில் யாருமே எதிர்பார்த்து இருக்க மாட்டோம். அதிலும் நேற்று ஒரே நாளில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.9520 உயர்ந்து ரூ.1.34 லட்சத்திற்கு உயர்ந்துள்ளது.

 

இந்நிலையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்தது.

 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.4800 சரிந்து ரூ.1,29,600க்கு விற்பனை.

வெள்ளி விலையும் அதிரடியாக கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.415க்கும்,கிலோவுக்கு ரூ.10,000 குறைந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.4,15,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.