குட் நியூஸ்..!! திருக்கோவில் பணியிடங்களை நிரப்ப தேர்வு வாரியம்: அமைச்சர் ரமேஷ்..!!
சட்டசபையில் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் வெளியிட்ட அறிவிப்புகள் பின்வருமாறு:
*இந்தாண்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட 64 கோவில்களில் 125 கோடி ரூபாயில் புனரமைப்பு பணி
*சிதிலமடைந்த 150 கோவில்களில் 85 கோடி ரூபாய் செலவில் திருப்பணி
*22 கோவில்களில் தேவையான திருப்பணிகள் செய்ய 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு
*சமயபுரம், மருதமலை உள்ளிட்ட 13 கோவில்களில் மண்டபங்கள், சுற்று மண்டபம், வசந்த மண்டபம் மகா மண்டபம் இளைபாறும் மண்டபம் போன்றவை ரூ.21.37 கோடியில் கட்டித்தரப்படும்.
*குச்சனூர் சனீஸவரர் கோவில் உட்பட 8 கோவில்களுக்கு 22 .25 கோடி ரூபாயில் மதிப்பில் ராஜகோபுரம் கட்டப்படும்
*சென்னை கொளத்தூர் சோமநாதர் கோவில் வேளச்சேரி தண்டீஸ்வரர் கோவில், நுங்கம்பாக்கம் பிரசன்ன வெங்கடேச பிரசன்ன பெருமாள் கோவிலில் 2 கோடி ரூபாய் மதிப்பில் 3 புதிய மரத்தேர் செய்ய அறிவிப்பு வெளியீடு
*திருச்சி ரங்கநாதர் கோவில், திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோவில், மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் உட்பட 105 கோவில்களில் திருக்குள பணிகளுக்காக 45 கோடி ரூபாய் ஒதுக்கீடு
*சமயபுரம் உள்ளிட்ட 3 கோவில்களில் 11 கோடி ரூபாய் மதிப்பில் பக்தர்களுக்கான தங்கும் விடுதி
*திருவண்ணாமலை, பழநி, சிறுவாபுரி, இருக்கன்குடி உள்ளிட்ட 22 கோவில்களில் 50 கோடி மதிப்பில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்.
*பக்தர்கள் அதிகளவு வரும் 20 திருக்கோவில்களில் பக்தர்களின் நலன் கருதி 3 கோடி ரூபாய் செலவில் ஆம்புலன்ஸ் வாங்க நடவடிக்கை.
*கோவில்களால் நடத்தப்படும் 4 பள்ளிகளில் சுகாதார வளாகம், குடிநீர் வசதி, விளையாட்டு அரங்கம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த 5.52 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
*அறுபடை வீடு கோவில்களை முன்மாதிரி கோவில்களாக மாற்ற திட்ட அறிக்கை
*கிராம தெய்வங்களின் வழிபாட்டு மரபை போற்றும் வகையில் கிராம தெய்க கிராம திருவிழா நடத்தப்படும்.
*அனைத்து மண்டலங்களிலும் கூத்து நாடகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் கிராமிய திருவிழா
*கோவில் வளாகத்திலேயே பிரசாதம் தயாரித்து வழங்கும் திட்டம் 15 கோவில்களில் மேம்படுத்தப்படும்.
*மூத்த குடிமக்கள் ஆயிரம் பேருக்கு அந்தந்த பகுதி முக்கிய கோவில்களுக்கு ஆன்மிக பயணத்துக்கு ஏற்பாடு செய்யப்படும்
*கோயில் நிலங்களில் அடர்வனம் மற்றும் நந்தவனம் அமைக்கப்படும்
*சித்தர்களின் பெருமையை போற்றும் வகையில் விழா நடத்தப்படும்.
*காமராஜர் பிறந்த நாளில் கோயில்களில் பொது விருந்து ஏற்பாடு செய்யப்படும்.
*மருதமலை, அழகர்கோவில்களுக்கு சொந்தமான பள்ளிகளில் மேம்பாட்டு பணிகள் செய்யப்படும்.
*மருதமலை கோவில் பள்ளியில் 90 லட்சம் ரூபாயில் கலையரங்கம் சுகாதார வளாகம் அமைக்க நடவடிக்கை
*அழகர் சுந்தர்ராசா மேல்நிலை பள்ளியில் 87 லட்சம் ரூபாயில் குடிநீர் உள்ளிட்டவசதிகள் ஏற்பாடு செய்யப்படும்.
*திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் கலை அறிவியல் கல்லூரிக்கு நிரந்தர கட்டடம் கட்டப்படும்.
*பழநி கோயில் கல்வி நிறுவனங்களுக்கு 3.10கோடி ரூபாயில் 9 புதிய பஸ்கள் வாங்கப்படும்
*மீண்டும் யானைகள் புத்துணர்வு நல்வாழ்வு முகாம் நடத்தப்படும்.
* கோவை, மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே பவானி ஆற்றின் கரையோரம், ரூ.3 கோடி மதிப்பில் யானைகள் நலவாழ்வு முகாம் மீண்டும் நடத்தப்படும்
*மீனாட்சி அம்மன் கோயில் கருணை இல்லத்தில் கூடுதல் அறை நவீன சமையல் கூடம் அமைக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை அமைச்சர் ரமேஷ் வெளியிட்டார்.