குட் நியூஸ்..!! இனி 3வது குழந்தைக்கும் சம்பளத்துடன் விடுப்பு..!
தமிழக அரசு பெண் பணியாளர்களுக்கு, முதலாவது மற்றும் இரண்டாவது குழந்தைகளுக்கு தலா, 12 மாதங்கள் முழு சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கப்படுகிறது. மூன்றாவது குழந்தைக்கு, 12 வாரங்கள் விடுப்பு வழங்க அனுமதி வழங்கப்பட்டு வந்தது.இந்நிலையில் சட்டசபையில் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் சரத்குமார் பேசுகையில், தமிழகத்தில் அனைத்து அரசு பெண் ஊழியர்களுக்கும் மூன்றாவது குழந்தை பெற்றுக் கொள்ள ஓராண்டு மகப்பேறு விடுமுறை அளிக்கப்படும் என அறிவித்தார்.
அரசு பெண் ஊழியர்களுக்கு முதல் இரண்டு குழந்தைகளுக்கு மட்டுமே சம்பளத்துடன் கூடிய ஓராண்டு மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டு வந்தது. தற்போது மூன்றாவது குழந்தைக்கும் இந்த விடுப்பு வழங்கும் வகையில் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மூன்றாவது குழந்தை பெறும் அரசு பெண் ஊழியர்கள், குழந்தை பிறப்பைத் தொடர்ந்து தங்களது உடல்நலம் மற்றும் குழந்தையின் பராமரிப்பை கருத்தில் கொண்டு ஓராண்டு மகப்பேறு விடுப்பை பயன்படுத்திக்கொள்ள முடியும்.
இதன் மூலம் அரசு பெண் ஊழியர்களுக்கு கூடுதல் சலுகை கிடைத்துள்ளதுடன், குழந்தை பராமரிப்புக்கும் போதிய கால அவகாசம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.