×

குட் நியூஸ்..!! ஆவினில் 20 ரூபாய்க்கு மில்க் ரஸ்க் அறிமுகம்..!!

 

தமிழக பால் உற்பத்தியாளர் கூட்டுறவு நிறுவனமான, ஆவின் வாயிலாக, பால் மட்டுமின்றி, வெண்ணெய், நெய், தயிர், பால்கோவா, மைசூர் பா, மிக்சர், பட்டர் முறுக்கு, மில்க் பிஸ்கெட், குக்கீஸ் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட, மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்கள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டன.

இதன் வாயிலாக, ஆவினுக்கு மாதந்தோறும், 100 கோடி ரூபாய் வரை வருவாய் கிடைத்து வந்தது.

தற்போது, பல பொருட்களின் உற்பத்தி படிப்படியாக நிறுத்தப்பட்டு உள்ளதால், ஆவினுக்கு, 120 கோடி ரூபாய் அளவிற்கு நஷ்டம் ஏற்பட்டு உள்ளது.

இந்த சரிவில் இருந்து மீண்டு வருவதற்கான முயற்சிகளில் தற்போது, ஆவின் இறங்கி உள்ளது.

இந்நிலையில், நுகர்வோரை கவரும் வகையில், 'மில்க் ரஸ்க்' விற்பனையை, ஆவின் நிறுவனம் தொடங்கி உள்ளது.

மொத்தம், 100 கிராம் எடையுள்ள, 'ஆவின் ரஸ்க்' 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பல்வேறு தனியார் நிறுவனங்கள், 80 கிராம் எடையுள்ள ரஸ்க்கை, 10 ரூபாய்க்கு விற்பனை செய்யும் நிலையில், 20 கிராம் கூடுதலாக சேர்த்து, 20 ரூபாய்க்கு ஆவின் விற்பனை செய்து வருகிறது.

மில்க் ரஸ்க்கிற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து, ஏலக்காய், முந்திரி, ஓட்ஸ் உள்ளிட்டவை கலந்த ரஸ்க் விற்பனையை தொடங்க திட்டமிட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.