குட் நியூஸ்..!! ரூ.6,000ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு..!!
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் பணியாற்றும் தூய்மைக் காவலர்களுக்கான மதிப்பூதியம் ரூ.5,000-ல் இருந்து ரூ.6,000ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்காக ரூ.417 கோடி கூடுதல் நிதியை ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளையும் தூய்மையாக வைத்திருக்கும் வகையில் தூய்மைக்காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் வீடுதோறும் திடக்கழிவுகளை சேகரித்து தரம் பிரித்து வருகின்றனர்.
கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மைக்காவலர்களுக்கு மாதம் ரூ. 5 ஆயிரம் மதிப்பூதியம் வழங்கப்பட்டு வந் இந்த மதிப்பூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்று தூய்மைக்காவலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் பணியாறும் தூய்மைக்காவலர்களுக்கான மதிப்பூதியத்தை ரூ. 5 ஆயிரத்தில் இருந்து ரூ. 6 ஆயிரமாக உயர்த்தி தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது.