×

குட் நியூஸ்..!! அதிரடியாக சரிந்த தங்கம் விலை

 
1920ஆம் ஆண்டில் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை வெறும் 21 ரூபாயாக இருந்தது. 4 தசாப்தங்களை தாண்டியும் கூட 70களில் சவரன் விலை கிட்டத்தட்ட 150 ரூபாயாகவே இருந்தது. ஆனால், அடுத்தடுத்த ஆண்டுகளில் உலகளவில் ஏற்பட்ட பண வீக்கம், பொருளாதார சரிவு, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பின்மை போன்ற பல்வேறு காரணங்களால் தங்கம் விலை ரூ. 1000-ஐ தாண்டியது. அப்போது தொடங்கி, கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றம் கண்டு வந்த தங்கம் விலை 2024ஆம் ஆண்டில் ரூ.50 ஆயிரத்தை தொட்டது. ஆனால் வரலாற்றிலேயே இல்லாத வகையில் முதன்முறையாக ஒரே ஆண்டில் ரூ. 50 ஆயிரத்துக்கும் மேல் அதிகரித்து ஒரு சவரன் தங்கம் விலை 2025இல் ரூ.1 லட்சத்தை தாண்டியது.
இந்நிலையில், இனிவரும் ஆண்டுகளிலும் தங்கம் விலை உயர்ந்துகொண்டேதான் போகும் என்று நிபுணர்கள் கணித்திருக்கின்றனர். அடிக்கடி உலக நாடுகளிடையே ஏற்படுகிற போர் பதற்றங்கள் மற்றும் பல நாடுகளில் எடுக்கப்படும் அதிரடியான பொருளாதார கொள்கைகளும் முக்கிய காரணங்களாக சொல்லப்படுகின்றன.
தங்கம் விலை இன்று(பிப்.16) குறைந்துள்ளது. 22 கேரட் தங்கம் 1 கிராமுக்கு ₹120 குறைந்து ₹14,440-க்கும், சவரன் ₹960 குறைந்து ₹1,15,520-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் ஏற்பட்ட சரிவின் காரணமாக இந்திய சந்தையில் இன்று தங்கம் விலை கணிசமாக குறைந்துள்ளது.
அதேநேரம் வெள்ளி விலையில் மாற்றமின்றி 1 கிராம் ₹280-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹2,80,000-க்கும் விற்பனையாகிறது.