×

குட் நியூஸ்..!!தங்கம் விலை இன்று மிகப்பெரிய அளவில் குறைந்தது..!!

 

மேற்காசிய போர் காரணமாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தங்கத்தின் விலை நிச்சயமன்ற தன்மையில் இருந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் வரும் காலங்களின் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூன் முதல் நாளில் இருந்தே தங்கத்தின் விலை குறைந்து கொண்டே வந்தது.

தங்கம் விலை இன்று மிகப்பெரிய அளவில் குறைந்துள்ளது.

22 கேரட் தங்கம் கிராமுக்கு 400 குறைந்து 13,800-க்கும், சவரனுக்கு 3,200 குறைந்து 1,10,400-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் 3% வரை விலை சரிந்துள்ளதால் நம்மூரிலும் அதன் தாக்கம் எதிரொலித்துள்ளது.

வரும் நாள்களில் தங்கம் விலை மேலும் சரிய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.10 குறைந்து, ரூ.260-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.10,000 குறைந்து ரூ.2,60,000-க்கு விற்பனையாகிறது