குட் நியூஸ்..!! இன்றும் அதிரடியாக சரிந்த தங்கம் விலை..!!
தங்கம் விலை எப்போதும் உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மை, பலவீனமான டாலர் மதிப்பு மற்றும் உலகளாவிய பதட்டங்கள், போர் சூழல் காரணமாக மாற்றத்தைக் கண்டு வருகிறது. இதுபோன்ற சூழலில், ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கூட்டாக நேற்று அதிரடியாக தாக்குதல் நடத்தியது.
பொதுவாக போர் நடைபெற்றால், முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீட்டை தேர்ந்தெடுக்கும் நோக்கில், தங்கத்தின் மீது முதலீடு செய்வர்.
ஆனால் இப்போது போர் காரணமாக பங்குச் சந்தை வீழ்ச்சியடைந்து வருகிறது. அதே நேரத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது. இதனால் தங்கம் விலை கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. போர் தொடங்கிய முதல் நாளில் தங்கம் விலை உச்சம் தொட்ட நிலையில், அடுத்தடுத்த நாட்களில் விலை குறைந்து வருகிறது.
கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று (மார்ச் 06) தங்கம் விலை குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.160 குறைந்து ரூ.14,960க்கும், ஒரு சவரனுக்கு ரூ. 1,280 குறைந்து ரூ.1,19,680க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.290க்கும், ஒரு கிலோ ரூ.5,000 குறைந்து ரூ.2,90,000க்கு விற்பனையாகிறது.