குட் நியூஸ்..!! சட்டென்று குறைந்த தங்கம் விலை..!
இந்தியர்களின் பிரதான சேமிப்பு மற்றும் முக்கிய நிகழ்வுகளில் தங்கம் முன்னணி இடம் வகிக்கிறது. இதனால் மற்ற உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் நமது நாட்டில் தங்கத்தின் தேவை மிகவும் அதிகமாகவே இருக்கிறது.
கடந்த ஆண்டில் விலை கணிசமாக உயர்ந்தபோதும் வாடிக்கையாளர்கள் தங்கம் வாங்குவதை நிறுத்தவில்லை. ஆனால் இந்த ஆண்டு தங்கம் விலை குறைந்திருந்தாலும் தற்போது தங்கம் வாங்கலாமா? வேண்டாமா? முதலீடு செய்ய இது உகந்த நேரமா? என பல்வேறு கேள்விகள் எழுந்து வருகிறது.
ஏனெனில் போரினால் ஏற்பட்ட கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டை சமாளிக்க இந்தியாவில் தங்கத்தின் இறக்குமதி வரி உயர்த்தப்பட்டது. இதனால் கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் தற்போது தங்கத்தின் பயன்பாடு நமது நாட்டில் குறைந்திருக்கிறது என்கின்றனர் நிபுணர்கள். குறிப்பாக, தங்கத்தின் சந்தை அளவு கிட்டத்தட்ட 6% குறைந்திருப்பதாக தெரிவித்திருக்கின்றனர்.
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஆக., 4) ரூ.400 குறைந்துள்ளது.
நேற்று ஒரு கிராமுக்கு ரூ.30 உயர்ந்து, ரூ.13,250-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.106,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று கிராமுக்கு ரூ.50 குறைந்து, ரூ.13,200-க்கும், சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.105,600-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை 8வது நாளாக மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.235-க்கும், ஒரு சவரன் ரூ.2 லட்சத்து 35 ஆயிரத்துக்கும் விற்கப்பட்டு வருகிறது.