×

குட் நியூஸ் ..!! தங்கம் விலை அதிரடியாக குறைந்தது..!!

 

ஒரே ஆண்டில் ரூ.50 ஆயிரம் வரை ஒரு சவரன் தங்கம் உயர்ந்திருப்பது சாமானிய மக்களிடையே பேசுபொருளாகி இருக்கிறது. 

தங்கம் விலை ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. டிசம்பர் 15ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ஒரு லட்சத்தை கடந்த நிலையில், நேற்று ஒரு சவரன் ரூ.1,04,800க்கு விற்பனை செய்யப்பட்டது. காலையில் சவரனுக்கு ரூ.880 உயர்ந்த தங்கம் விலை, மாலையில் ரூ.800 உயர்ந்தது. இதனால் ஒரு சவரன் தங்கம் ரூ.13,100க்கு விற்பனையாகி வருகிறது.

இன்று (டிச.29) தங்கம் விலை குறைந்துள்ளது. 22K ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.80 குறைந்து ரூ.13,020க்கும், ஒரு சவரனுக்கு ரூ.640 குறைந்து ரூ.1,04,160க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4 குறைந்து ரூ.281க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.4,000 குறைந்து ரூ.2,81,000க்கும் விற்பனையாகிறது.