குட் நியூஸ்..!! வாரத்தின் முதல் நாள் அதிரடியாக குறைந்தது தங்கத்தின் விலை..!!
Mar 9, 2026, 09:46 IST
தங்கத்தின் விலை அதிகரித்தாலும், அதன் மீதான ஆர்வம் மக்களுக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏனென்றால், இந்திய மக்களின் சேமிப்பில் ஒன்றாக விளங்கும் தங்கம், பொருளாதார முதலீடாகவும் கருதப்படுகிறது. இருந்தாலும், சமீபமாக ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை, பாமர மக்களுக்கு எட்டாக்கனியாக மாறி வருகிறது.
இந்த நிலையில், அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் பதற்றம் காரணமாக, தங்கம் விலை புதிய உச்சத்தைத் தொடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், யாரும் எதிர்பார்க்காத விதமாக 5 நாட்களாக தங்கம் விலை சரிவை சந்தித்து வந்தது. குறிப்பாக, மார்ச் 2 ஆம் தேதி குறையத் தொடங்கிய தங்கம் விலை, மார்ச் 6 வரை ரூ. 6,500 வரை சரிந்தது.
அந்த வகையில், வாரத்தின் கடைசி நாளான (சனிக்கிழமை) தங்கம் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மக்களின் எதிர்பார்ப்புகளை உடைத்த தங்கம் விலை, கடந்த 5 நாட்களுக்கும் சேர்த்து அதிரடியாக உயர்ந்தது.
அதன்படி, சென்னையில் சனிக்கிழமை 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ. 90 உயர்ந்து, ரூ. 15,050-க்கும், சவரனுக்கு ரூ. 720 அதிகரித்து ரூ. 120,400-க்கும் விற்பனை ஆனது. அதேசமயம் வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ. 290-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 2,90,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைவு குறைந்துள்ளது
இதனால் 1 கிராம் தங்கம் 14,950-க்கும், சவரன் 1,19,600-க்கும் விற்பனையாகிறது. அதேநேரம் வெள்ளி விலையில் எவ்வித மாற்றமுமின்றி 1 கிராம் 290-க்கு விற்பனை செய்யப்படுகிறது