×

குட் நியூஸ்..!! தொடர்ச்சியாக 7வது நாளாக சரிந்த தங்கம் விலை..!!

 
உலக நாடுகளிடையே மூண்டுள்ள போரின் காரணமாக தங்கம் விலை சரிந்து வருகிறது.
பொதுவாக போர் ஏற்பட்டால் தங்கம் விலை கூடும். ஆனால் தற்போது அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் இடையேயான போரானது தங்கம் விலை மீது எதிர்மறையாக தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அதற்கு, முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்வதற்கு பதிலாக அதனை விற்று, லாபம் பார்ப்பதே முக்கியமான காரணமாக சொல்லப்படுகிறது.
கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற,இறக்கத்துடன் இருந்து வருகிறது. இந்நிலையில்,சென்னையில் இன்று (மார்ச் 18) 22K ஆபரண
தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது.
அதன்படி, கிராமுக்கு ரூ.80 குறைந்து ரூ.14,570க்கும், சவரனுக்கு ரூ.640 குறைந்து ரூ.1,16,560க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச அளவில் நிலவும் பதற்றமான சூழல் காரணமாக தங்கம் விலை குறைந்து வருவதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.270-க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.5,000 குறைந்து ரூ.2,75,000-க்கும் விற்பனையாகிறது.
கடந்த 10 நாட்களில் 22 காரட் தங்கத்தின் விலை
தேதி கிராம் விலை (ரூ.) சவரன் விலை (ரூ.)
மார்ச் 16 ரூ.14,650 ரூ.1,17,200
மார்ச் 16 ரூ.14,710 ரூ.1,17,680
மார்ச் 15 ரூ. 14,760 ரூ.1,18,080
மார்ச் 14 ரூ. 14,760 ரூ.1,18,080
மார்ச் 13 ரூ.14,900 ரூ.1,19,200
மார்ச் 12 ரூ.14,970 ரூ.1,19,760
மார்ச் 11 ரூ.15,120 ரூ.1,20,960
மார்ச் 10 ரூ.15,050 ரூ.1,20,400
மார்ச் 9 ரூ.14,950 ரூ.1,19,600
மார்ச் 8 ரூ.15,050 ரூ.1,20,400