குட் நியூஸ்..!! 4வது நாளாக இன்றும் குறைந்த தங்கம் விலை..!
10 நாட்களுக்கும் மேலாக நீடித்து வரும் கடுமையான போரின் தாக்கம் உலக நாடுகளை பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி இருக்கிறது. குறிப்பாக, எரிவாயு மற்றும் எண்ணெய் தட்டுப்பாடு தலைதூக்க தொடங்கியிருக்கிறது. பங்குச் சந்தைகளும் தொடர்ந்து சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன.
பொதுவாக இது போன்ற போர் சூழல்களில் முதலீட்டாளர்கள் நிச்சயமற்ற முதலீடுகளை தவிர்த்து பாதுகாப்பான முதலீட்டை தேர்ந்தெடுப்பர். அதனால் டாலரை தவிர்த்து தங்கத்தின் மீது அதிகளவில் முதலீடு செய்வர். இதனால் உலக சந்தையின் தங்கம் விலை கணிசமாக கூடும். ஆனால் தற்போதுள்ள சூழலில் பாதுகாப்பாக முதலீடு செய்ய வேண்டும் என்பதையும் தாண்டி, தங்களது முதலீட்டை பாதுகாக்க வேண்டும் என்பதே பெரும்பாலான முதலீட்டாளர்களின் நோக்கமாக மாறியிருக்கிறது.
இதன் காரணமாக, பங்குச் சந்தை முதலீட்டை தவிர்த்தது போன்றே, தங்கத்தின் மீதும் முதலீடு செய்ய தயக்கம் காட்டுகின்றனர். இதன் காரணமாக, விலையேற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட தங்கம் தற்போது விலை சரிவை சந்தித்து வருகிறது. இருப்பினும், சந்தை நிலவரத்துக்கேற்ப ஏற்றம் காணப்படுகிறது.
ஆபரண தங்கத்தின் விலை இன்று மீண்டும் கிராமுக்கு ரூ. 50 குறைந்து ஒரு கிராம் ரூ.14,710-க்கு விற்பனை செய்யப்படுகிறது.ஒரு சவரன் இன்று ரூ. 400 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,17,680-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
நேற்று (மார்ச் 15) ஒரு சவரன் ரூ.118,080க்கு விற்பனையான நிலையில் இன்று ரூ.400 குறைந்து, ஒரு சரவன் ரூ.1,17,680 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ஒரு கிராம் தங்கம் நேற்று ரூ.14,760க்கு விற்பனையான நிலையில், இன்று கிராமுக்கு ரூ.50 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,710 க்கு விற்பனை செய்யப்படுகிறது
வெள்ளி ஒரு கிராமுக்கு ரூ.4 குறைந்து ரூ.276க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.4,000 குறைந்து ரூ.2,76,000க்கும் விற்பனையாகிறது.
கடந்த 10 நாட்களில் 22 காரட் தங்கத்தின் விலை
மார்ச் 14 ரூ.14,760 ரூ.1,18,080
மார்ச் 13 ரூ.14,900 ரூ,1,19,200
மார்ச் 12 ரூ.14,970 ரூ.1,19,760
மார்ச் 11 ரூ.15,120 ரூ.1,20,960
மார்ச் 10. ரூ.15,050 ரூ.1,20,400
மார்ச் 9 ரூ.14,950 ரூ.1,19,600
மார்ச் 8 ரூ.15,050 ரூ.1,20,400
மார்ச் 7 ரூ.15,050 ரூ.1,20,400
மார்ச் 6 ரூ.14,960 ரூ.1,19,680
மார்ச் 5 ரூ.15,120 ரூ.1,20,960