குட் நியூஸ்..!!தங்கம் விலை ரூ.480 குறைவு!
இந்தியர்களின் முக்கிய சேமிப்பாக இருக்கும் தங்கம் கடந்தாண்டில் எங்கு விட்டதோ.. அதே இடத்தில் இந்தாண்டை தொடங்கியுள்ளது. ஆரம்பம் முதலே தங்கம் விலை அதிரடியாக ஏறி வருகிறது. இதனால் தங்கத்தை வாங்க முடியாமல் இந்தியர்கள் திணறி வருகின்றனர்.
கடந்த மாதம் 28-ந்தேதி புதிய உச்சத்தை தொட்டு, பிறகு விறுவிறுவென இறங்கியது. அப்படியாக விலை குறைந்து வந்து, கடந்த ஒரு வாரமாக மீண்டும் ஏற்றத்திலேயே தங்கம் விலை இருக்கிறது.
இந்நிலையில் நேற்று தங்கம் விலை சற்று உயர்ந்தது. அதன்படி சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,06,320-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.10 அதிகரித்து ஒரு கிராம் ரூ.13,290-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று (ஜனவரி 16) தங்கம் விலை சவரனுக்கு 480 ரூபாய் சரிந்து, ஒரு சவரன் 1,05,840 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.13,230க்கும், ஒரு சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.1,05,840க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4 குறைந்து, ரூ.306க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.4,000 குறைந்து ரூ.3,06,000க்கும் விற்பனையாகிறது.