×

குட் நியூஸ்..!! தங்கம் விலை ரூ.1,440 சரிவு..!!

 

நகை வாடிக்கையாளர்களும், முதலீட்டாளர்களும் எப்போது நகை வாங்கலா முதலீடு செய்ய ஏற்ற நேரம் இதுவா? என்ற கேள்விகளுடன் இருக்கின்றனர். காரணம் தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏறி இறங்கி வருகிறது.

எனினும், அமெரிக்க டாலர் மதிப்பு வலுப்பெற்று வருவதால் தற்போதைக்கு அதன் மதிப்பு குறைய வாய்ப்பில்லை என்று கூறுகின்றனர்.

இந்த கருத்து ஒருபுறம் இருந்தாலும், பாதுகாப்பான முதலீடான தங்கத்தை மத்திய வங்கிகள் அதிகளவில் வாங்கி வருவதால் பெருமளவில் விலை குறையாது என்றும் கூறுகின்றனர். இதனால் தங்கம் விலையின் ஏற்ற இறக்கம் கணிக்க முடியாத வகையில் இருக்கிறது.

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 1,440 சரிந்துள்ளது. நேற்று ஒரு கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ. 14,220-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.113,760-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று கிராமுக்கு ரூ.180 குறைந்து ரூ.14,040-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.1,440 குறைந்து ரூ.112,360-க்கும் விற்பனையாகிறது.

கடந்த 5ஆம் தேதி ஒரு சவரன் ரூ.107,840-க்கு விற்கப்பட்ட நிலையில், கடந்த 10 நாட்களில் ரூ.4,480 உயர்ந்துள்ளது.

வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.5 குறைந்து, ரூ.255-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.5,000 குறைந்து ரூ.2,55,000-க்கு விற்பனையாகிறது