குட் நியூஸ்..!!கடந்த 2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1040 சரிவு..!
Sep 25, 2025, 09:50 IST
தங்கம் விலை நேற்று முன் தினம் நிலவரப்படி கிராமுக்கு ரூ.210-ம், சவரனுக்கு ரூ.1,680-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 640-க்கும், ஒரு சவரன் ரூ.85 ஆயிரத்து 120-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன்மூலம் தங்கம் விலை இதுவரை இல்லாத வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டு இருந்தது.
நேற்று தங்கம் விலை சற்று குறைந்தது. இதன்படி தங்கம் விலை கிராமுக்கு ரூ.40-ம், சவரனுக்கு ரூ.320-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 600-க்கும், ஒரு சவரன் ரூ.84 ஆயிரத்து 800-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் தங்கம் விலை மீண்டும் ரூ.85 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. வெள்ளி விலையை பொறுத்தவரையில், நேற்று மாற்றம் இல்லாமல், ஒரு கிராம் ரூ.150-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்றும் ஆபரணத் தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரண தங்கம் விலை கிராமுக்கு ரூ.90-ம், சவரனுக்கு ரூ.720-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 510-க்கும், ஒரு சவரன் ரூ.84 ஆயிரத்து 080-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இன்றும் வெள்ளி விலையில் மாற்றமின்றி, ஒரு கிராம் ரூ.150-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-
25.09.2025 ஒரு சவரன் ரூ.84,080 (இன்று)
24.09.2025 ஒரு சவரன் ரூ.84,800 (நேற்று)
23.09.2025 ஒரு சவரன் ரூ.85,120
22.09.2025 ஒரு சவரன் ரூ.83,440
21.09.2025 ஒரு சவரன் ரூ.82,320
20.09.2025 ஒரு சவரன் ரூ.82,320