×

குட் நியூஸ்..!! தொடர் சரிவில் தங்கம் விலை..!!

 
10 நாட்களுக்கும் மேலாக நீடித்து வரும் கடுமையான போரின் தாக்கம் உலக நாடுகளை பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி இருக்கிறது. குறிப்பாக, எரிவாயு மற்றும் எண்ணெய் தட்டுப்பாடு தலைதூக்க தொடங்கியிருக்கிறது. பங்குச் சந்தைகளும் தொடர்ந்து சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன.
பொதுவாக இது போன்ற போர் சூழல்களில் முதலீட்டாளர்கள் நிச்சயமற்ற முதலீடுகளை தவிர்த்து பாதுகாப்பான முதலீட்டை தேர்ந்தெடுப்பர். அதனால் டாலரை தவிர்த்து தங்கத்தின் மீது அதிகளவில் முதலீடு செய்வர். இதனால் உலக சந்தையின் தங்கம் விலை கணிசமாக கூடும். ஆனால் தற்போதுள்ள சூழலில் பாதுகாப்பாக முதலீடு செய்ய வேண்டும் என்பதையும் தாண்டி, தங்களது முதலீட்டை பாதுகாக்க வேண்டும் என்பதே பெரும்பாலான முதலீட்டாளர்களின் நோக்கமாக மாறியிருக்கிறது.
இதன் காரணமாக, பங்குச் சந்தை முதலீட்டை தவிர்த்தது போன்றே, தங்கத்தின் மீதும் முதலீடு செய்ய தயக்கம் காட்டுகின்றனர். இதன் காரணமாக, விலையேற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட தங்கம் தற்போது விலை சரிவை சந்தித்து வருகிறது. இருப்பினும், சந்தை நிலவரத்துக்கேற்ப ஏற்றம் காணப்படுகிறது.
இந்நிலையில், சென்னையில் 22K ஆபரண தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ. 70 குறைந்து ரூ. 14,900க்கும், சவரனுக்கு ரூ. 560 குறைந்து ரூ. 1,19, 200க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று (மார்ச் 12) சவரனுக்கு ரூ.1,200 குறைந்த நிலையில், இன்றும் விலை குறைந்திருப்பது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.