×

குட் நியூஸ்..!! ஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம் விலை..!! 

 

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் டாலரில் விற்கப்படுவதால், டாலர் மதிப்பு கூடி வருகிறது. இதன் காரணமாக தங்கம் விலை குறைந்து வருகிறது. கச்சா எண்ணெய் விலை மாற்றத்திற்கு ஏற்ப, தங்கம் விலையும் ஒரே நாளில் இரண்டு அல்லது மூன்று முறை கூட மாற்றம் கண்டு வருகிறது.

ஆபரண தங்கத்தின் விலை நேற்று காலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ. 13,600-க்கும், சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,08,800க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், காலையில் குறைந்த தங்கம் விலை மாலையில் கிராமுக்கு ரூ.170-ம், சவரனுக்கு ரூ.1,360-ம் உயந்தது. அதன்படி, ஒரு கிராம் ரூ.13,770-க்கும், ஒரு சவரன் ரூ.1,10,160-க்கும் விற்கப்பட்டது.

இந்நிலையில் இன்று ஒரு சவரன் தங்கம் ரூ.800 குறைந்து ரூ.1,09,360க்கு விற்கப்படுகிறது. மேலும் ஒரு கிராம் தங்கம் ரூ.100 ரூ.13,670க்கு விற்கப்படுகிறது.

மேலும், ஒரு கிராம் வெள்ளி விலை ரூ. 5 குறைந்து ரூ.250 க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.5000 குறைந்து ரூ.2,50,000க்கு விற்கப்படுகிறது.